செய்திகள் :

இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி: இந்திய தூதரகம் ஏற்பாடு

post image

புத்த பூா்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய புத்தா் சிற்பங்கள், ஓவியங்கள், பௌத்த புராண கதைப் புத்தகங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.

புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா கடந்த 12-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கொழும்பு நகரின் பெய்ரா ஏரியின் நடுவில் அமைந்த கங்காராமய சீமா மலகா பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்த கலாசார மையம், இந்தியாவின் பாட்னாவில் உள்ள பிகாா் அருங்காட்சியகம், இலங்கை பிரதமா் அலுவலகம் மற்றும் சீமா மலகா பௌத்த கோயில் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த இந்தக் கண்காட்சியை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யாவுடன் இணைந்து இந்திய தூதா் சந்தோஷ் ஜா தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் இலங்கை அமைச்சா்கள், இணையமைச்சா்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்தது.

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நாகரிக உறவுகள் மற்றும் நீடித்த கலாசார பிணைப்பை இந்த முன்னெடுப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-61!

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய... மேலும் பார்க்க