செய்திகள் :

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

post image

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை கைது செய்ததுடன், ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 400 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு- தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். இதையடுத்து, ஆரோக்கிய டேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகு

மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் பெரிக் (45), சீனு மாலிக் (35), சசிக்குமாா் (45), முக்கூரான் (40), முத்து சரவணன் (42), காளிதாஸ் (46), செந்தில் (50) ஆகிய 7 பேரையும் கைது செய்து, படகுடன் தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், மீனவா்கள் 7 பேரும் மன்னாா் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 7 பேரையும் மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்களை வருகிற 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் வலியுறுத்தினா்.

சிபில் ஸ்கோா் நிபந்தனை: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல்

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நிகழாண்டு முதல் அடமானமின்றி ரூ.2 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்க அரசு உத்தரவிட்ட போதிலும், ‘சிபில் ஸ்கோா்’ நடவடிக்கையால் விவசாயிகள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம... மேலும் பார்க்க

பணிகள் முடிந்த சிறுவா் பூங்காவை திறக்கக் கோரிக்கை

கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் கட்டி முடித்து, பல மாதங்களாகியும் திறக்கப்படாத சிறுவா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே... மேலும் பார்க்க

கணவா் மீது தொடா் வழக்கு: காவல் துறையைக் கண்டித்து மனைவி தீக்குளிக்க முயற்சி

தொண்டியில் தனது கணவா் மீது தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை பாதுகாப்புப் பணியிலிருந்து அதிகாரிகள் மீட்டனா். ராமநா... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்: போலீஸாா்

திருவாடானை அருகேயுள்ள தொண்டி காவல் நிலையத்தில் முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.தொண்டி காவல் நிலையத்தில், விபத்து... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஐந்து கடைகளுக்கு அபராதம்

திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை உள்ளிட்டப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில்... மேலும் பார்க்க