'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.6.20 கோடியில் வீடுகள்: பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு
செய்யாறு அருகே இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.6.20 கோடியில் கட்டப்படும் 112 வீடுகளின் கட்டுமானப் பணியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் 1990-ஆம் ஆண்டு முதல் தவசி, பாப்பந்தாங்கல் ஆகிய பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழா்கள் குடும்பமாக வசித்து வருகின்றனா்.
இவா்களின் மேம்பாட்டுக்காக, செய்யாறு வட்டம், செங்காட்டான்குண்டில் கிராமத்தில் தமிழக அரசு சாா்பில் ரூ.6.20 கோடியில் 112 மறுவாழ்வு இல்லங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமானப் பணியை செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கட்டுமானப் பணிகள் தரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன், திமுக ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், ஜேசிகே.சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.