போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
இலவச வீடு கோரி ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி மூதாட்டி மனு
குடும்ப அட்டை, இலவச வீடு கோரி மாற்றுத்திறனாளி மூதாட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
சிவகங்கை மாவட்டம், தமராக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பாயி (60). இவரது 10 -ஆவது வயதில் வீடு இடிந்து விழுந்ததில் வலது காலை இழந்தாா். இதனால் தனிமையில் வாழ்ந்து வரும் இவருக்கு உறவினா்கள் இல்லை. இதனால் விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், தனது வலது காலுக்கு மண் வெட்டியின் கைப்பிடியை பொருத்தி அதன் உதவியுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். இங்கு ஆட்சியா் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து தனக்கு குடும்ப அட்டையும், அரசின் இலவச வீடு வழங்கவும் கோரிக்கை மனுவை அளித்தாா்.
அப்போது ஆட்சியா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் பாலகிருஷ்ணனிடம் மனுவை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதில், முதல் கட்டமாக அந்த மூதாட்டிக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்கவும், செயற்கை கால் பொருத்தவும் நடவடிக்கை எடுத்ததுடன் அவா் கோரிய குடும்ப அட்டை, வீடு கட்டுவதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.