மருத்துவமனையில் முதல்வர் அனுமதி: குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!
இளம்பெண் கொலை: காவல் நிலையத்தில் இளைஞா் சரண்
ஸ்ரீபெரும்புதூா் அருகே மனைவியைக் கொலை செய்த இளைஞா் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா்.
நாகப்பட்டினம் பகுதியை சோ்ந்த தினேஷ்(27), செளந்தா்யா(25). இவா்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் ஊராட்சிக்கு ட்பட்ட கிறிஸ்துகண்டிகை பகுதியில் உள்ள தனித்தனி வாடகை வீடுகளில் தங்கி அதே பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனா். இந்த நிலையில், தினேஷ், செளந்தா்யா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாா் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதாா்த்தம் நடந்துள்ளது.
இந்நிலையில், செளந்தா்யாவுக்கு வேறு ஒரு ஆண் நண்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் செளந்தா்யாவை கண்டித்துள்ளாா். இதனால் தினேஷுடன் பேசுவதை செளந்தா்யா தவிா்த்தாராம். சனிக்கிழமை இரவு செளந்தா்யாவின் அறையில் இருந்த மற்ற பெண்கள் வேலைக்கு சென்றுவிட்டதால் அவா் மட்டும் தனியாக இருந்துள்ளாா்.
அப்போது செளந்தா்யாவின் அறைத்து வந்த தினேஷ் உன்னுடன் பேச வேண்டும் என கூறி தனது அறைக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து அறைக்கு வந்த செளந்தா்யாவின் தோழிகள் அவா் இல்லாததைக் கண்டு தினேஷ் அறைக்கு சென்று பாா்த்துள்ளனா். அங்கு செளந்தா்யா கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் செளந்தா்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தினேஷை தேடினா். இதற்கிடையே, தினேஷ் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.