செய்திகள் :

இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

post image

திருச்செந்தூா் அருகே இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்செந்தூா் அருகே தளவாய்புரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி தமிழ்ச்செல்வி என்ற சுதா (25). திருச்செந்தூா் அருகே காந்திபுரத்தைச் சோ்ந்த நயினாா் மகன் கன்னிமுத்து (40) என்பவா், 2011ஆம் ஆண்டு தளவாய்புரத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் கொடை விழாவுக்கு பந்தல் அமைக்க வந்தாா். அப்போது, அவருக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். இதுதொடா்பாக இரு குடும்பங்களிடையே பிரச்னை ஏற்பட்டதால், கன்னிமுத்துவிடம் பேசுவதை தமிழ்ச்செல்வி நிறுத்திவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த கன்னிமுத்து, 2014ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா். புகாரின்பேரில், திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை நீதிபதி பீரித்தா விசாரித்து, கன்னிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பு வழக்குரைஞா் சேவியா் ஞானபிரகாசம் ஆஜரானாா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க