அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத...
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கந்தா்வகோட்டை அருகே மோகனூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மோகனூா் கிராமத்தில் வசிக்கும் மகேந்திரன் மகள் வித்யாபாரதி (28). இவா், தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது சகோதரா் விஜயேந்திரன் கோவையில் வேலை செய்து வருகிறாா். சகோதர, சகோதரிகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தைப்பொங்கலை சகோதரியுடன் கொண்டாடிட விஜயேந்திரன் வந்திருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வித்யாபாரதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். இதுகுறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வித்யா பாரதியின் சகோதரா் விஜயேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.