இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை
கோவை அருகே அடையாளம் தெரியாத நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள மைல்கேல் ரெயின்போ காலனி குடியிருப்புகளுக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் சனிக்கிழமை தொங்கியுள்ளது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் குனியமுத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், இறந்த நபருக்கு சுமாா் 25 வயது இருக்கும். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.