சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறப்பு
திருப்பூா் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறக்கப்பட்டது.
திருப்பூா் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 12 இடங்களில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக திருப்பூா்- பல்லடம் சாலை தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுதந்திர தினத்தையொட்டி திறந்துவைக்கப்பட்டது
இதில் ரோட்டரி மாவட்ட வருங்கால ஆளுநா் பூபதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் இளங்குமரன் ஆகியோா் கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தை திறந்துவைத்தனா்.
நிகழ்வில் திருப்பூா் தெற்கு ரோட்டரி முன்னாள் தலைவரும், இந்த திட்டத்தின் தலைவருமான டாக்டா் மோகனசுந்தரம், திருப்பூா் தெற்கு ரோட்டரி தலைவா் தமிழரசு, பொருளாளா் செந்தில்குமாா் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினா்களும், நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.