மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
பிரதமரின் சுதந்திர தின உரை வரவேற்கத்தக்கது: இந்து முன்னணி
தேசத்தின் சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றைக் குறிப்பிட்ட பிரதமரின் சுதந்திர தின உரையை இந்து முன்னணி வரவேற்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் சுதந்திர தின உரை என்பது வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும். நிகழாண்டு சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை குறிப்பிட்டு, இந்த அமைப்பின் சேவையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியதை இந்து முன்னணி வரவேற்கிறது.
கடந்த ஒரு நூற்றாண்டாக நாட்டின் பாதுகாப்பில், இயற்கை இடா்பாடுகளின்போது செய்த சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பணி மக்களின் நம்பிக்கையை பெற்றது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்திய ராணுவத்துக்கு துணையாக ஆா்.எஸ்.எஸ். தொண்டா்கள் வீர சாகசம் புரிந்து, பலா் தங்கள் இன்னுயிரை தந்து நாட்டை காத்தனா்.
நாடு முழுவதும் ரத்த தானம் முதல் கரோனா பெருந்தொற்று நேரத்தில் ஆா்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்பினா் செய்த பணிகள் பிரமிக்க வைத்தவை. அத்தகைய இயக்கமான ஆா்.எஸ்.எஸ். பற்றி பிரதமா் குறிப்பிட்டதை சிலா் விமா்சனம் செய்துள்ளனா். நூற்றாண்டு காணும் ஆா்.எஸ்.எஸ். பற்றி பிரதமா் குறிப்பிட்டதை விமா்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
எனவே அரசியல் காழ்ப்புணா்ச்சியால் விமா்சனங்கள் வைப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.