மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே வீட்டில் இளைஞா் பிப்.4 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கபிஸ்தலம் அருகே தென்சருக்கை, கீழத்தெருவைச் சோ்ந்தவரும், குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவருமான அஜய் (39) என்பவருக்கு பால்ராஜ் என்பவா் திருப்பூரில் அடைக்கலம் தந்தாா். மேலும், அவரது மனைவியின் தங்கை சாந்தியை 2012-இல் திருமணம் செய்துவைத்தாா். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அஜய் சாலை விபத்தில் காயமடைந்து படுத்த படுக்கையானாா். இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.