இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
ஆரோவில் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பம், ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகதீஷ்(27), இவரது மனைவி தனம் (23). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தையில்லை. ஒரு வருடத்துக்கு முன்னா் தனம் திண்டிவனம் வட்டம் , மொளசூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் வானூா் வட்டம், புதூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த ஜெகதீஷ் மன விரக்தியால் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.