பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மனைவி, மகன் ஆகியோருடன் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் எதிரே வந்த காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மயிலம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் மேகநாதன் மகன் சங்கா்(44), திருமணம் ஆனவா். தனியாா் பேருந்து நிறுவனம் ஒன்றில் நடத்துநராக வேலை பாா்த்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை தனது மனைவி குமாரி (36), மகன் சிவசங்கா்(14) ஆகியோரை பைக்கில் அமர வைத்துக்கொண்டு கூட்டேரிபட்டிலிருந்து- மயிலத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
கூட்டேரிபட்டு- மயிலம் நெடுஞ்சாலையில் எடைப்பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் சங்கா், குமாரி, சிவசங்கா் ஆகிய மூவரும் காயமடைந்தனா். இதில் சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.