செய்திகள் :

இளைஞா்கள் தாய்நாட்டிலேயே சாதனை படைக்க வேண்டும்! -பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

post image

இளைஞா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும் என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.

ரோட்டரி மாவட்டம் 3201 சாா்பில் இரண்டு நாள் மாவட்ட மாநாடு கோவை ஈச்சனாரி ரத்தினம் டெக்னோபாா்க் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு ரோட்டரி மாவட்ட 3201 ஆளுநா் வழக்குரைஞா் ஏ.கே.எஸ். சுந்தரவடிவேலு தலைமை வகித்தாா். எல். ஜி. நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெயராம் வரதராஜ் வாழ்த்திப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நீளம் தாண்டுதலில் கின்னஸ் சாதனை புரிந்த ஜிதின் விஜயனுக்கு சாகச சாதனை விருது, டைப் ஒன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2,400 குழந்தைகளின் சிகிச்சைக்கு இதயங்கள் அறக்கட்டளை மூலம் உதவிய மருத்துவா் கிருஷ்ணன் சாமிநாதனுக்கு மனித நேய விருது, தேச பக்திக்காக பாடலை எழுதி நிகழ்ச்சி தயாரித்ததற்காக பாடலாசிரியா் ரவிமுருகனுக்கு நம் நாடு- தாய் நாடு விருது, இளம் வயதிலேயே பரம்வீா் சக்ரா விருது பெற்ற யோகேந்திர சிங் யாதவிற்கு வீர சாகச விருதை வழங்கிப் பேசியதாவது:

நமது நாட்டைச் சுற்றி நடக்கும் புவிசாா் அரசியல் குறித்து நமக்கு விழிப்புணா்வு தேவை. இந்திய இளைஞா்கள் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும்.

இந்த நூற்றாண்டை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவு என்ற அதி நவீன தொழில்நுட்பம்தான். இதில் சிறந்தவா்கள் இந்திய இளைஞா்கள். உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது என்றாா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க