செய்திகள் :

`இவர்களுக்கு' கடன் கொடுக்கும்போது, சிபில் ஸ்கோர் பார்க்காதீர்கள் - மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

post image

எவருக்கும் கடன் எளிதாக கிடைத்துவிடாது.

ஒருவரின் சிபில் ஸ்கோரை செக் செய்தே கடன் வழங்குவார்கள். இந்த சிபில் ஸ்கோர் ஒருவர் கடன் வாங்கி அதை திரும்ப கட்டியது பொறுத்தே அமையும்.

யாருக்கு எவ்வளவு சிபில் ஸ்கோர்?

சிபில் ஸ்கோர் 900 பாயிண்டுகள் வரை கணக்கிடப்படும். இதில் ஒருவர் 750 பாயிண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால், அவரது சிபில் ஸ்கோர் சிறப்பாக உள்ளது.

அதற்கு குறைந்தால், அவரது சிபில் ஸ்கோர் நன்றாக இல்லை என்று பொருள் கொள்ளலாம்.

கடன்
கடன்

ஒருவர் எத்தனை கடன் வாங்கியிருந்தாலும், அனைத்திற்கும் சரியாக வட்டி கட்டி முழுமையாக கட்டி முடித்திருந்தால் அவரின் சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருக்கும்.

ஆனால், இதில் எதாவது மாற்றம் இருந்தால், சிபில் ஸ்கோர் பாதிக்கும். கடன் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். அப்படியே கிடைத்தாலும் அதிக வட்டி வசூலிக்கப்படும்.

-1 சிபில் ஸ்கோர்

ஆனால், ஒருவர் இதுவரை எந்தக் கடனையுமே வாங்கவில்லை என்றால், அவரது சிபில் ஸ்கோர் -1 ஆக இருக்கும்.

இதற்கு காரணம், குறிப்பிட்ட அந்த நபர் எப்படி வட்டியை திரும்ப செலுத்துவார் என்று தெரியாதது தான். அதனால், இவருக்கு கடன் கொடுக்க வங்கிகள் மிகவும் யோசிக்கும்.

இந்த நடைமுறை சிக்கலை எளிதாக்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

credit score

அதன்படி, முதன்முதலில் கடன் வாங்குபவர்களிடம் வங்கிகள், நிதி நிறுவனங்கள் சிபில் ஸ்கோரைப் பார்க்கக்கூடாது. இதை கடந்த ஜனவரி மாதமே இந்திய ரிசர்வ் வங்கி கூறிவிட்டது.

இது குறித்து நிதித்–துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு பதிலாக, கடன் கேட்பவரின் பின்னணியை ஆய்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

'இனி 4 மணிநேரம் தான்' - காசோலை கிளியரிங் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் குட் நியூஸ்!

இனி காசோலையை வங்கியில் போட்டுவிட்டு, நாள் கணக்கில் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. எவ்வளவு மணிநேரத்தில்..?அதன்ப... மேலும் பார்க்க