செய்திகள் :

இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா; ஓரணியில் திரண்ட ரஷ்யா, சீனா, வட கொரியா; உலகம் என்ன சொல்கிறது?

post image

இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல்கள் ஒரு வாரத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இந்தத் தாக்குதலினால் மூன்றாம் உலகப் போர் அச்சம், கச்சா எண்ணெய் விலைவாசி உயர்வு, செங்கடல் மற்றும் ஹார்முஸ் பாதையில் நடக்கும் வணிக பாதிப்புகள் எனப் பல அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து உலகில் உள்ள சில நாடுகள் இந்தத் தாக்குதலில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. அவை என்ன என்று பார்க்கலாம்.

அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்குச் சாதகமாகத்தான் மறைமுகமாகப் பேசி வருகிறார். ஈரானை மிரட்டி வருகிறார். இந்த மறைமுக ஆதரவு, சமீப நாள்களில் ஓப்பனாகவே மாறியுள்ளது.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

ரஷ்யா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானைத் தாக்கும் இஸ்ரேலின் தாக்குதலில், 'தான் இணையலாம்... இணையாமலும் போகலாம்' என்று கூறியிருந்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி , "வாஷிங்டன் இந்த மாதிரியான நிலைப்பாட்டைப் பரிந்துரைப்பதைக் கூட நாங்கள் எச்சரிக்கிறோம். இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்" என்று கூறியுள்ளார்.

சீனா

நேற்று முன்தினம் ரஷ்ய (ஜூன் 19) அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தொலைப்பேசியில் பேசியுள்ளனர்.

அப்போது ஜின்பிங், "இரு நாடுகளுக்கு இடையே சீக்கிரம் தாக்குதல் நிறுத்தம் நடைபெற வேண்டும். ஈரானை இஸ்ரேல் தாக்குவது சர்வதேச சட்ட மீறல்.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் நிலைமையைப் பெரிதாக்க முயலாமல், சரிப்படுத்த முயல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

வட கொரியா

வட கொரியா வெளியுறவுத் துறையில் செய்தித்தொடர்பாளர் பியோங்யாங், "தற்போதுள்ள மோசமான நிலைமையைப் பார்க்கையில் அமெரிக்கா, இஸ்ரேலை ஆதரிக்கிறது என்று நன்கு தெரிகிறது.

மத்திய கிழக்கில் உள்ள அமைதியைக் கெடுக்கும் புற்றுநோயைப் போன்றது இஸ்ரேல். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கெடுக்கும் தலைமை குற்றவாளி அதுதான்" என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அவரது வெளியுறவுத் துறை அமைச்சரிடம், தங்களது ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தத் தாக்குதலை நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

என்ன தான், ஒவ்வொரு நாடுகள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் அனைவரும் தெரிவிக்கும் கருத்து ஒன்று தான், 'இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தம்'.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | களம் 2: Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்... மேலும் பார்க்க

'எத்தனை செய்துள்ளேன்; இருந்தும்..!' - நோபல் பரிசுக்காக புலம்பி தீர்க்கும் ட்ரம்ப்

'அமெரிக்காவிற்கும் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று பிரதமர் மோடி நேரடியாக போன்காலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தெரிவித்தும் கூட, அவர் தனது கருத்தில் இருந... மேலும் பார்க்க

TVK: "நாங்க வந்தாலே கரண்ட் கட் பண்றீங்க; ஏன் பயப்படுறீங்க?" - திமுகவை அட்டாக் செய்த என்.ஆனந்த்

'விஜய் பிறந்தநாள் பொதுக்கூட்டம்!'தவெக தலைவர் விஜய்யின் தனது 51 வது பிறந்தநாளை நாளை கொண்டாடவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தவெக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நில... மேலும் பார்க்க

கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!

கீழடி அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இத்துடன் கீழடியில் ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு மதுரையில் மத்திய அரசை... மேலும் பார்க்க

"சாது மிரண்டால் காடு கொள்ளாது; அதிமுக-வை சீண்டி பார்க்க வேண்டாம்!" - எச்சரிக்கும் சி.விஜயபாஸ்கர்

தி.மு.க ஐ.டி விங் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தவறாக சித்திரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம் வெளியிட்டதாக கூறி, அதற்கு எதிராக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட தி.மு.... மேலும் பார்க்க