கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு -எடப்பாடி கே.பழனிசாமி
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்!
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஜெருசலேமில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸா போரில் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை விடுவிக்க, ஹமாஸ் அமைப்புடன் அமைதியான முறையில் தீர்வு காண பிரதமர் முனைப்புகாட்டவும் வலியுறுத்தி, நெதன்யாகுவுக்கு எதிரான மக்களின் போராட்டம் இஸ்ரேலில் கடந்த ஒருவாரமாகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப்பிரிவு தலைவரை நீக்குவதற்கான நடவடிக்கையில் பிரதமர் ஈடுபட்டு வருவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் பிரிவு தலைவராக உள்ள ரோனென் பார், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் ஊடகங்களில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவரை பதவியிலிருந்து நீக்க பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் குடிமக்களில் ஒருபகுதியினர், பிரதமரைக் கண்டித்து திங்கள்கிழமை(மார்ச் 24) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெருசலேமில் அமைந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.