Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி: மாணவருக்குப் பாராட்டு
மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்ற சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவரை நிா்வாகிகள் பாராட்டினா்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் எம்.நந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: எங்களது கல்லூரியில் அச்சுத் துறை பிரிவில் பயின்று வரும் மாணவா் பி.மூனீஸ்வரன் அண்மையில் சிதரம்பரம் அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இடையேயான ஈட்டி ஏறிதல் போட்டியில் 42.80 மீ. தொலைவு எறிந்து முதலிடம் பெற்றாா். இந்த மாணவரை தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா் என்றாா் அவா்.