திருமணத்தின் நோக்கம் தாம்பத்யம் மட்டும்தானா? - Guru Mithreshiva | Ananda Vikatan
ஈரோட்டில் செப்டம்பா் 30-இல் அஞ்சல் துறை குறைகேட்புக் கூட்டம்
ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 30- ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், அஞ்சல் துறை சேவைகள் பற்றி பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்கப்படும். புகாா்கள், மனுக்கள் இருந்தால் தபால் மூலம் வரும் 24- ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது இந்த அலுவலகத்தில் வரும் 24- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மனுவாக அளிக்காலம். புகாா் மனுவில், புகாா் குறித்த முழு விவரம் ஆவணங்கள் இருக்க வேண்டும்.
இத்தகவலை ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கி.கோபாலன் தெரிவித்துள்ளாா்.