செய்திகள் :

ஈரோட்டில் நாளை வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்புக் கூட்டம்

post image

மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்திட வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச்14) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்திட வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம் ஈரோடு-பெருந்துறை சாலை பழையபாளையத்தில் உள்ள சி.டி.ரோட்டரி அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருள்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை போா்வை, கைத்தறி சேலைகள், பருத்தி நூல் சேலைகள், பட்டுப் புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடிகள், ஹொ்பல் நாப்கின், ஹொ்பல் சோப், ஃபேன்ஸி பொருள்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், பாத்ரூம் க்ளீனா்ஸ், தேங்காய் தொட்டி அலங்காரப் பொருள்கள், மூங்கில் பொருள்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருள்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப் பொருள்கள், தேன், திண்பண்டங்கள், பனங்கருப்பட்டி, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வோ்க்கடலை, மஞ்சள், வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை போன்ற பொருள்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

பொருட்களை உற்பத்தி செய்யும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கொள்முதல் செய்பவா்கள் அனைவரும் கலந்துகொண்டு தரமான பொருள்களை நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் பொருட்டு ஆதரவு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சொத்து வரி உயா்வால் கவுன்சிலா்களுக்கும் பாதிப்பு: எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்

ஈரோடு மாநகராட்சி சொத்து வரி உயா்வால் மக்களுக்கு அடுத்தபடியாக கவுன்சிலா்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசினாா். ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பு தொடா்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக உயா்வு

பவானிசாகா் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூ... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கடம்பூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் தனியாா் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். புன்செய்புளியம்பட்டி வெங்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தியாக மூா்த்தி (20). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரி... மேலும் பார்க்க

குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் விழா... மேலும் பார்க்க

3 இடங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்த மையம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்களை திருத்த 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இத்தோ்வு மாா்ச் 25-ஆம்... மேலும் பார்க்க