``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
ஈரோட்டுக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து ஈரோட்டுக்கு அரைவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
வலங்கைமான், மன்னாா்குடி பகுதியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகிய இடங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,000 டன் சன்ன ரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.