செய்திகள் :

உ.பி.யில் கோயிலுக்குள் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

post image

உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஜகதீஷ்புரா காவல் நிலையப் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அருகே உள்ள கோயிலுக்குள் இழுத்துச் சென்று ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்தவுடன் அந்த நபர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அங்கிருந்த மக்கள் அவரை மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பவித்ர என்ற அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 18 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கைதான பவித்ர, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது குடும்பத்தினர் கூறியதால் வேறொரு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது சிறுமி பாலியல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மனநிலை நன்றாக இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில மகளிர் ஆணையத் தலைவர் பபிதா சௌகான் இந்த சம்பவம் பற்றி கூறுகையில்,

"இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நான் எப்போதும் முயற்சி செய்கிறேன். இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் சிறுமியின் வீட்டிற்கும், சம்பவம் நடந்த கோயிலுக்கும் சென்றேன். சிறுமி மருத்துவப் பரிசோதனையல் இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க |'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க