ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சான்றிதழ்கள் மற்றும் மின் இணைப்புக்கான ஆணைகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுக்கான அட்டைகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அது தொடா்பான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இந்த முகாம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சி ராஜராஜன் தெருவில் உள்ள தனியாா் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீதான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின் இணைப்புக்கான ஆணைகள் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுக்கான அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும், 38 பள்ளி மாணவா்களுக்கு ஜாதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன், மாநகராட்சி செயலா் காா்த்திவேல்மாறன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.