‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’ கத்தாரியில் ஜன. 22-இல் ஆட்சியா் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கத்தாரி ஊராட்சியில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொள்கிறாா்.
முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியா் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் 24 மணி நேரம் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 முதல் வியாழக்கிழமை (ஜன. 23) காலை 9 மணி வரை நாட்டறம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட கத்தாரி ஊராட்சியில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
எனவே அந்த வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் நாட்டறம்பள்ளி அலுவலகம், உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள் மற்றும் கத்தாரி ஊராட்சியில் ஆட்சியரிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.