செய்திகள் :

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: ``ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி!'' - த.வெ.க அறிக்கை

post image

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பில், ``ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்டவிரோதமானது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என வழக்கறிஞர் வில்சன் கூறியிருக்கிறார்.

இது குறித்து த.வெ.க சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ``தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது மேதகு ஆளுநரின் கடமை.

ஆனால், நமது மாநில ஆளுநரோ தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார். இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறி ஆக்கினார்.

மாநிலத் தன்னாட்சி உரிமையை அவமதிப்பதாகவும் இச்செயல் இருந்தது. இதோ இப்போது, மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம், ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

TVK Vijay
TVK Vijay

மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துள்ளது. மாநில உரிமை காக்கும், மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை தமிழக வெற்றிக் கழகம் மனதார வரவேற்கிறது.

தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று.

மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு.

இதை நம் கழக வெற்றித் தலைவரின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`குளோபல் ஜாப் மார்க்கெட்; எனது கனவு’ - துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியதென்ன?

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்."'போதும்' என நினைக்கக் கூடாது" இதில் பேசி... மேலும் பார்க்க

Article 142 மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்றம் - விவாதிக்கப்படுவது ஏன்? | In-Depth

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கெதிரான தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநிற... மேலும் பார்க்க

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் கொடூர தாக்குதல் - 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் யார்?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை, 2023-ம் ஆண்டு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டார். அதில்... மேலும் பார்க்க

`திமுக நீர் மோர் பந்தலுக்காக குப்பை வண்டியில் சென்ற குடிநீர்' - அதிர்ச்சி வீடியோ, வலுக்கும் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக உள்ளவர் திமுக-வைச் சேர்ந்த விநாயகா பழனிசாமி. இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சாமளாபுரத்தில் நீர் மோர் பந்தல் ... மேலும் பார்க்க

``நீங்க வசிப்பது வக்ஃப் நிலம்; வாடகை கொடுங்க...’’ - ஒரு கிராமமே அதிர்ச்சி; என்ன நடக்கிறது வேலூரில்?

வேலூர் மாவட்டம், இறைவன்காடு ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் வீடுகள் கட்டி வசித்து வரும் 150 குடும்பங்களிடம் திடீரென மாதாந்திர தரை வாடகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது விரிஞ்சிபுரம் பக... மேலும் பார்க்க

Palm Sunday: டெல்லியில் ஈஸ்டர் குருத்தோலை ஊர்வலத்திற்குத் தடை; பாஜக அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையின்போதுதான் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கடந்த 15 ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில... மேலும் பார்க்க