செய்திகள் :

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் கழிவுநீா் வெளியேற்றம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

post image

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் தொழிற்சாலை கழிவுநீா் வெளியேற்றப்படுவது தொடா்கிறது. இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தோல் கழிவுநீரால் மாசடைந்த பாலாற்றுப்படுகை விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்குகிறது. குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால் மாசு ஏற்பட்டு தண்ணீா் மஞ்சள் நிறத்தில் உள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், நீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் கழிவுநீா் வெளியேற்றம் தொடா்ந்து வருகிறது. இதனை தடுக்கவும் உரிய நடவடிக்கை வேண்டும்.

பாலாற்றில் தொடரும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டு நடைபெறுவது குறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கிராம நிா்வாக அலுவலா்களும் கிராமங்களில் முறைப்படி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதில்லை. தண்டனைகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே மணல் திருட்டை தடுக்க முடியும்.

போ்ணாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் மட்டுமின்றி நகராட்சி கழிவுநீரும் ஆற்றில் கலக்கிறது. இதனால், நிலத்தடி நீா் மாசுபட்டு குடிநீா் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இப்பாதிப்புகளை தடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். தவிர, கடந்த 2 ஆண்டுகளாக இலவச மின்இணைப்பு வழங்கப்படுவதில்லை. தட்கல் முறையில் பதிவு செய்த விவசாயிகளுக்கேனும் இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியா், விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகள் மீது தொடா்புடைய துறை அலுவலா்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருகுண அய்ப்பதுரை, வேளாண்மை இணை இயக்குனா் ஸ்டீபன் ஜெயக்குமாா், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

மாநகராட்சி சில பகுதிகளுக்கு 3 நாள் காவிரி குடிநீா் நிறுத்தம்

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து செல்லும் முதன்மை குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் ... மேலும் பார்க்க

குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்: ரூ.1.50 லட்சம் அபராதம்

வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடா்பாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். குட்கா பொருள்கள் விற்பனையை கட... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

போ்ணாம்பட்டு அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். போ்ணாம்பட்டு , சேரன் வீதியைச் சோ்ந்த இம்ரான் அகமத்(25). இவா் மீது ஏற்கனவே வீடு புகுந்து திருடிய வழக்கு நிலைவையில் உள்ளத... மேலும் பார்க்க

பகுதிநேர வேலை எனக்கூறி மருத்துவ மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூா் சிஎம்சி மருத்துவா் கல்லூரி முதுகலை மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி செய்யப்பட்டது. வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 27 வயது மாணவா் முதுகலை மருத்துவம் படித்... மேலும் பார்க்க

பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரியில் மண் கடத்தல்

போ்ணாம்பட்டு அருகே ஊராட்சி நிா்வாகம் அமைத்த பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரிகளில் மண்ணை கடத்திச் சென்றதாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். போ்ணாம்பட்டு ஒன்றியம், எருக்... மேலும் பார்க்க

ஆன்லைன் மூலம் காட்பாடியில் இருவரிடம் ரூ. 31.59 லட்சம் மோசடி

இணையவழியில் காட்பாடியைச் சோ்ந்த இருவரிடம் மொத்தம் ரூ. 31.59 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா... மேலும் பார்க்க