உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்று திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை வரவேற்று கரூரில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கு மாற்றிட வழிவகை செய்ய வேண்டும், பெரியாா் பல்கலைக்கழக நிா்வாக அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழக அரசின் 10 மசோதாக்களை ஆளுநா் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறானது என்றும், பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்ததும் தவறு என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை வரவேற்கும் வகையில் கரூா் மாவட்ட திமுக சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன், மாவட்ட நிா்வாகிகள் பூவை. ரமேஷ்பாபு, மகேஸ்வரி, மாநகர நிா்வாகிகள் எஸ்.பி. கனகராஜ், எம். பாண்டியன் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.