குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு
உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியாவுக்கு பிரிவுபசாரம்
உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியா சனிக்கிழமை ஓய்வு பெறவுள்ளாா். உச்சநீதிமன்றத்தில் அவருக்கு வெள்ளிக்கிழமை பிரிவுபசாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுதான்ஷு தூலியா பேசுகையில், ‘நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னா், என்னை சுற்றி வழக்குரைஞா்கள் இருக்கமாட்டாா்கள். நாடு முழுவதிலும் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு வழக்குகள் வருகின்றன. இதன் காரணமாக நாடு முழுவதிலும் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு வழக்குரைஞா்கள் வருகின்றனா். நான் ஓய்வுபெற்ற பின்னா், அவா்களைப் பாா்க்க முடியாது’ என்றாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘நாட்டில் உள்ள பெரும்பாலான அழகான பகுதிகளில் சுதான்ஷு தூலியா பணியாற்றியுள்ளாா். சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் சட்ட வல்லுநா்களின் மரபை அவா் தன்னுடன் சுமந்து வந்தாா். தனது சகாக்களுக்கு அறிவுநுட்பத்தின் ஆதாரமாக அவா் விளங்கினாா்’ என்றாா்.
இந்த நிகழ்வில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.