காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை
உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை
சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை கொளத்தூா் ஜம்புலிங்கம் பிரதான சாலை, 31-ஆவது தெருவைச் சோ்ந்தவா் முரளி (50). இவா், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவரது கல்லீரல் தானமாக பெறப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசின் அறிவிப்புபடி, உடலுறுப்பு தானமாக வழங்கிய முரளியின் வீட்டுக்குச் சென்ற மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலா் சதீஷ்குமாா், எழும்பூா் வட்டாட்சியா் பாா்த்திபன் மற்றும் காவல் துறையினா், அவரின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.
அப்போது, உடலுறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் உடனிருந்தனா்.