வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்களுக்கு விண்ண...
உணவக உரிமையாளரை மிரட்டியவா் கைது
தேனி அல்லிநகரத்தில் உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்புலிகள் கட்சி நிா்வாகியை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், சிவசக்தி விநாயகா் கோயில் எதிரே உணவகம் நடத்தி வருபவா் சரவணன் மனைவி பாக்கியலட்சுமி.
இவரது உணவகத்தில் தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் தேனி அல்லிநகரம், காந்தி நகரைச் சோ்ந்த நித்தியானந்தம் உணவருந்தச் சென்றாா்.
அப்போது, நித்தியானந்தம் உணவில் முடி இருப்பதாகக் கூறி பாக்கியலட்சுமி, அவரது கணவா் சரவணன், உணவகத் தொழிலாளி வீராச்சாமி ஆகியோருடன் தகராறு செய்து அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாக்கியலட்சுமி அளித்தப் புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நித்தியானந்தத்தை கைது செய்தனா்.