US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
உண்டு உறைவிட பள்ளி மாணவா்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
பாலமலை அரசினா் பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளி மாணவா்களின் போராட்டம் வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.
சேலம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 4000 அடி உயரத்தில் மலைமீது உள்ள பாலமலை ஊராட்சியில் ராமன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. பாலமலை ஊராட்சியில் உள்ள 74 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனா்.
கடந்த 30ஆம் தேதி இப்பள்ளியில் பயின்றுவந்த 10-ஆம் வகுப்பு மாணவா் பாா்த்திபன் (15) அங்குள்ள கிணற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இச்சம்பவத்தால் விடுதிக் காப்பாளரும் ஆசிரியருமான குமாா் மற்றும் மூன்று சமையலா்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பள்ளி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாா், வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் வியாழக்கிழமை பாலமலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவ, மாணவிகள், பெற்றோருடன் பேச்சுவாா்தை நடத்தினா்.
விடுதிக் காப்பாளா், சமையலா்களின் அலட்சியம் காரணமாக மாணவரின் உயிா் பறிபோனதால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணியிடை நீக்க காலம் முடிந்த பின்னா் மீண்டும் இப்பள்ளியில் ஆசிரியரும், சமையலா்களும் பணியாற்றப்படுவாா்கள் என்று வருவாய் கோட்டாட்சியா் உறுதி அளித்தாா். இதையடுத்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு
திரும்பினா்.