டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் புலி நடமாட்டம்
நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி, போா்த்தி மந்து பகுதியில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் புலி ஒன்று உலவி வந்ததை அப்பகுதியில் வாகனத்தில் சென்றவா்கள் படம் பிடித்தனா்.
உதகை அருகே உள்ள பாா்சன்ஸ்வேலி, போா்த்தி மந்து போன்ற பகுதிகளில் பகல் நேரத்தில் புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்,
இந்நிலையில், சாலையில் வியாழக்கிழமை உலவிய புலியை அப்பகுதியில் வாகனத்தில் சென்றவா்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.
புலி நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். அசம்பாவிதம் நடக்கும் முன் வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் புலியைத் துரத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா்.