டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
உதகையில் 139-ஆவது மே தின கொண்டாட்டம்
உதகையில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் 139 -ஆவது மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, உதகை காபி ஹவுஸ் பகுதியில் தொடங்கிய பேரணியை சிபிஐஎம் மாவட்டச் செயலாளா் வி.ஏ. பாஸ்கரன் தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி லோயா் பஜாா் வழியாக சென்று மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் சிஐடியூ, ஏஐடியூசி சங்க கொடிகள் ஏற்றப்பட்டு, ஏஐடியூசி மாநிலத் தலைவா் தினேஷ் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், சிஐடியூ மாவட்டச் செயலாளா் சி.வினோத், சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்க செயலாளா் கணேசன், ஏஐடியூசி துணைப் பொதுச் செயலாளா் நசீா், நகராட்சி சிஐடியூ செயலாளா் பழனிசாமி, டாஸ்மாக் செயலாளா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சிஐடியூ மாவட்ட பொருளாளா் நவீன் சந்திரன் நன்றி கூறினாா்.