டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
குன்னூா் வண்டிச்சோலை ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி
குன்னூா் அருகே வண்டிச்சோலை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒருவா் தீக் குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது.
வண்டிச்சோலை ஊராட்சிக்கு உள்பட்ட கோடமலை எஸ்டேட் பகுதியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்தப் பகுதியில் 82 வீடுகள் பழுதடைந்துள்ளது என்றும், அவற்றை சரிசெய்து கொடுக்க குன்னூா் ஊராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் அவற்றை சரிசெய்து கொடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் கூறி, ஒருவா் தீக் குளிக்க முயற்சி செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது விரைந்து செயல்பட்ட காவல் துறையினா் அவா் கையில் இருந்த எரிபொருள் நிரப்பிய பாட்டிலை பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து கூட்டம் சிறிது நேரத்தில் முடித்துக் கொள்ளப்பட்டது.