IVF சிகிச்சையில் குழந்தைக் கனவு நனவாகுமா..? | பூப்பு முதல் மூப்புவரை
குன்னூா் சத்திய நாகராஜா கோயில் குண்டம் விழா
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள மஞ்சக்கொம்பை மானிஹாட சத்திய நாகராஜ ஹெத்தையம்மன் கோயில் 51-ஆம் ஆண்டு குண்டம் விழா வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், 48 நாள்கள் விரதம் இருந்த ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
விழாவையொட்டி, உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.