``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
உதகையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கல்லுாரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி அரசின் சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது.
நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்வதற்காக அரசு இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.
அதன்படி, உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுத் துறை அலுவலா்கள் என பலா் பங்கேற்றனா்.