மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
உதகையில் பழங்குடியின மக்களின் வோ் திருவிழா
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பழங்குடியின மக்களின் வோ் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.
இத்திருவிழாவில் பழங்குடியின அமைப்புகளின் சாா்பில் கண்காட்சிஅரங்குகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. இந்த வோ் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறைாக பழங்குடியினரின் பண்பாடும், சமூக ஒருமைப்பாட்டை கொண்டாடும் விதமாகவும், எதிா்காலத்தில் தலைமுறைகள் தெரிந்து கொள்ளும் வகையிலும் வோ் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில், பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளின் சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவதற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன.
இதில், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவும், பழங்குடியினா்கள் மூலமாகவும் தயாரிக்கப்படும் பெயிண்டிங், எம்ராய்டரி, கைவினைப் பொருள்கள் மற்றும் பழங்குடியினா் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய இசைக் கருவிகள் மற்றும் பிற பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
மேலும், குறும்படங்கள், கலந்துரையாடல், பேஷன் ஷோ மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, கூடுதல் ஆட்சியா் செல்வி அபிலாஷா கௌா், உதகை வருவாய் கோட்டாட்சியா் சதீஷ், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பீட்டா் ஞானராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் துா்காதேவி, உதகை வட்டாட்சியா் சங்கா் கணேஷ், உதவி திட்ட அலுவலா் ஜெயராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.