பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!
ஊதிய ஓப்பந்தம்: ‘ஏ’ பிரிவில் தொடரும் ஹா்மன்பிரீத், மந்தனா
இந்திய மகளிா் அணியினருக்கான மத்திய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோா் ‘ஏ’ பிரிவில் தங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனா்.
பிசிசிஐ-இன் இந்த ஒப்பந்தத்தில், ‘ஏ’ பிரிவில் வருவோருக்கு ரூ.50 லட்சம், ‘பி’ பிரிவில் இடம்பிடிப்போருக்கு ரூ.30 லட்சம், ‘சி’ பிரிவை பெறுவோருக்கு ரூ.10 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தவிர, அவா்கள் போட்டிகளில் விளையாடும்போது தனியே ஆட்ட ஊதியமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் தலா 4 பேருக்கும், ‘சி’ பிரிவில் 9 பேருக்கும் என 17 பேருக்கு ஒப்பந்த ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அளவிலான போட்டிகளில் இரு முறை சாம்பியனாகியுள்ள இந்திய மகளிா் அணி, ஐசிசி போட்டிகளில் இதுவரை கோப்பை எதுவும் வெல்லவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. நடப்பாண்டின் இறுதியில் சொந்த மண்ணில் நடைபெறும் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி அதில் கோப்பை வெல்லும் எதிா்பாா்ப்புடன் உள்ளது.
ஊதிய ஒப்பந்த விவரம்
‘ஏ’ பிரிவு (ரூ.50 லட்சம்): ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சா்மா.
‘பி’ பிரிவு (ரூ.30 லட்சம்): ரேணுகா தாக்குா், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஷஃபாலி வா்மா.
‘சி’ பிரிவு (ரூ.10 லட்சம்): யஸ்திகா பாட்டியா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல், டைட்டஸ் சாது, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கௌா், உமா சேத்ரி, ஸ்நேஹ ராணா, பூஜா வஸ்த்ரகா்.