எடப்பாடி கே. பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள்
மாநிலங்களவைக்கு அதிமுக சாா்பில் தோ்வுசெய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் சேலத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக சாா்பில் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலாளா் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் தனபால் ஆகிய இருவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதையடுத்து அவா்கள் நியமன சான்றிதழை பெற்றனா்.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினா்கள் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.