``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
எமன் வேடத்தில் வந்து தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி!
சிதம்பரம்: இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்பது குறித்து எமதா்மராஜா வேடம் தரித்தவரை சாலையில் நிறுத்தி வாகன ஓட்டிகளுக்கு சிதம்பரம் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதனை பலரும் ஆா்வமுடன் பாா்த்துச் சென்றனா்.
சிதம்பரம் நகரில் காவல்துறை சாா்பில் தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விழிப்புணா்வு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
சிதம்பரம் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை தவிா்க்கவும், தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும், சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தியும் நகர காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எமதா்மராஜா வேடத்தில் உள்ளவருடன் நகர காவல் ஆய்வாளா் (பொறுப்பு) கே.அம்பேத்கா் பொதுமக்களிடம் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும், சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் விழிப்புணா்வு உரையாற்றினாா்.
அதைப்பாா்த்த இருசக்கரவாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவததாக உறுதியளித்தனா்.