எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை: தொல். திருமாவளவன்
எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கி வருகிறது. அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உரையில் எம்ஜிஆர் பற்றியும் குறிப்பிட்டேன். எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை பலமுறை மனம் திறந்து பாராட்டியுள்ளேன்.
தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் பேசினேன். எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆசையாகவும் அவருடைய முயற்சியாகவும் உள்ளது.
சசிகலா, ஓபிஎஸ் விவகாரத்தில் ஏற்கெனவே சொல்லியதுதான்: எடப்பாடி பழனிசாமி
அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். திமுக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கும் ஆனால் அது கூட்டணி உறவை சிதைக்கும் அளவு இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது என எந்த பொருளில் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்பதை அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.
எம்.ஜி.ஆரை ஒரு ஜாதிக்குள் நான் சுருக்கவில்லை தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியது. அது கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியதாக நான் கூறினேன். எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் ஜாதி எல்லைகளை கடந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.