செய்திகள் :

பாஜக மாநில செயலாளருக்கு எதிரான புகார்: சேலம் நீதிமன்றத்துக்கு உத்தரவு

post image

சென்னை: பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வன்கொடுமை புகார் தொடர்பாக, சேலம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் பாஜக ஸ்டார்ட்அப் விங் மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சரணடைந்து ஜாமீன் கோரினால், புகார்தாரரின் ஆட்சேபத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், ஏற்காட்டில் நில தகராறு தொடர்பாக, பக்கத்து எஸ்டேட் காவலாளி வெள்ளையன் என்பவரை, பாஜக மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் 3 பேர் சேர்ந்து, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிபி சக்கரவர்த்தி, தன்னை ஜாதிப்பெயரை கூறி திட்டி, தாக்கியதாக வெள்ளையன் அளித்த புகாரின் அடிப்படையில், ஏற்காடு போலீஸார், சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது தந்தை மணவாளன், மனைவி சித்ரா ஆகியோருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தால் ஜாமீன் வழங்கக் கோரி, சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், தங்களுக்கு எதிராக, பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீன் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரணடைந்து ஜாமீன் கோரும் போது, புகார்தாரரின் ஆட்சேபங்களை கேட்ட பின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்: இரா.முத்தரசன்

மாநிலக் கல்விக் கொள்கை, தன்னம்பிக்கை மற்றும் சுய திறனை ஊக்குவிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் மாநிலக்... மேலும் பார்க்க

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்ற... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(9.8.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில... மேலும் பார்க்க

அகல் விளக்கு திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

புதுகோட்டையில் அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ‘‘9 ம... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு

தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் ... மேலும் பார்க்க

எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை: தொல். திருமாவளவன்

எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமி... மேலும் பார்க்க