சசிகலா, ஓபிஎஸ் விவகாரத்தில் ஏற்கெனவே சொல்லியதுதான்: எடப்பாடி பழனிசாமி
சசிகலா, ஓபிஎஸ் விவகாரத்தில் ஏற்கெனவே சொல்லியதுதான் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு மக்கள் எம்ஜிஆர்- ஐ தெய்வமாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை விமர்சிப்பவர்கள், அரசியலில் காணாமல் போய்விடுவார்கள்.
அதிமுக-வை பொருத்தவரை பல கூட்டங்களில் தெரிவித்து இருக்கிறேன், ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது அதிமுக.
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் அவர்கள் மறைவிற்குப் பிறகும் அதிமுக ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது. அதிமுக-வில் எண்ணற்ற ஜாதியினர் இருக்கிறார்கள்.
அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். இதனை சிலரால் பொறுக்க முடியவில்லை. இதனுடைய வெளிப்பாடுதான் இவ்வாறு பேசுகிறார்கள் என்றார்.
முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் முதல்வரை சந்தித்துள்ளனரே என்ற கேள்விக்கு, அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்து விட்டது, அவர்கள் கூட்டணி இன்னும் எட்டு மாதத்தில் நிலைக்குமா? நிலைக்காதா? என்று தெரியவரும். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது.
ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை! 2 நாள்களில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
அதற்குள் சிறப்பான கூட்டணி அமையும். பாமக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது என்ற கேள்விக்கு, அது அவர்களுடைய சொந்தக் கட்சி. அதில் கருத்து சொல்வது சரியில்லாதது, நான் எப்பொழுதும் அப்படிப்பட்ட கருத்தை சொல்ல மாட்டேன்.
கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்ற அவரிடம், கட்சியிலிருந்து பிரிந்துள்ள சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் சேர்க்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன் , அதே கருத்துதான் எதற்கும் பொருந்தும் என்று அவர்களை சேர்க்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.