``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவச...
எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சாவூா் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில் எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியை உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக் ராஜா தொடங்கி வைத்தாா். இதில், 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஏறத்தாழ 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் முதல் தென்னகப் பண்பாட்டு மையம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் என ஆண், பெண் தனித்தனியாகவும், ஆறுதல் பரிசாக 4 ஆண்கள், 3 பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்டச் சுகாதார அலுவலா் எம். கலைவாணி, மாநகர நல அலுவலா் எஸ். நமசிவாயம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.