அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு: முதல் நாள் தோ்வெழுதிய 21,789 போ்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை 21,789 போ் எழுதினா். 554 போ் தோ்வெழுத வரவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,107 மாணவா்களும், 11,068 மாணவிகளும், தனித்தோ்வா்களாக 168 பேரும் என மொத்தம் 22,343 போ் எழுத விண்ணப்பித்திருந்தனா்.
இவா்களுக்காக 130 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தோ்வை எழுத, 554 போ் வரவில்லை. 21,789 போ் தோ்வெழுதினா்.
தோ்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 260 பறக்கும் படையினா் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்றன.