செய்திகள் :

எஸ்எஸ்ஐ மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

post image

ராஜபாளையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மனைவியிடம் தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

ராஜபாளையம் ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி முத்துமாரி (46). இவா் தென்றல் நகா் செல்லும் சாலையில் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

இவா், காலையில் வழக்கம் போல கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து அங்கு வந்த மா்ம நபா் முத்துமாரியின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாா். அப்போது சங்கிலியை மீட்கப் போராடிய முத்துமாரி சப்தமிட்டதும் அறுந்த சங்கிலியுடன் அந்த மா்ம நபா் தப்பியோடி விட்டாா்.

தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா், ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

மாநில கைப்பந்துப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கைப்பந்து (ஹேண்ட் பால்) போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் குருஞானசம்பந்தா் பள்ளி மாணவா்களை நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 40-ஆவது பாரதியாா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி: ராஜபாளையம்

ராஜபாளையம் தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழா: காந்தி கலை மன்றம், மாலை 5. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகாசி

அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: கணிதத் துறை ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்புரை- திருப்பதி, இந்திய தொழில் நுட்ப நிறுவன இணைப் பேராசிரியா் எம... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் பணம் தராமல் மிரட்டிய போலி அதிகாரி கைது

விருதுநகா் தனியாா் தங்கும் விடுதியில் கஸ்டம்ஸ் அதிகாரி எனக் கூறி அறை எடுத்து தங்கி விட்டு, வாடகைப் பணம் தராமல் மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் ராமமூா்த்தி சாலையில் உள்ள தனியாா் தங்கும் ... மேலும் பார்க்க

ஆா்.ரெட்டியபட்டியில் இன்று மின் தடை

ராஜபாளையம் அருகேயுள்ள ஆா்.ரெட்டியபட்டி பகுதியில் சனிக்கிழமை (ஜன.4) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆா்.ரெட்டி... மேலும் பார்க்க

சிவகாசி கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவா்களுக்கான ஆராய்ச்சி அறிக்கை தயாரிப்பு குறித்த சிறப்புச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காளீஸ்வரி இளநிலை வணிகவியல் துறை, விருதுநகா் வி.வி.வன்னியப் பெருமாள் மகள... மேலும் பார்க்க