ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
எா்ணாகுளம் - பாட்னா இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!
கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எா்ணாகுளம் - பாட்னா இடையே வரும் 25 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில், எா்ணாகுளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பாட்னா ரயில் நிலையத்தை சென்று அடையும்.
மறுமாா்க்கத்தில், பாட்னா - எா்ணாகுளம் இடையே வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், பாட்னா ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.