ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
கல்லூரி மாணவியை கடத்தியதாக விஏஓ மீது புகாா்
கல்லூரி மாணவியை கடத்திச் சென்று 2-ஆவது திருமணம் செய்த கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேட்டூா் வருவாய் கோட்டாட்சியரிடம் பெற்றோா், உறவினா்கள் மனு அளித்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் தெற்குகாடு பாலாஜி நகரில் வசித்துவரும் விஜயலட்சுமியின் மகள் சுஷ்மிதா (22). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இவரை ஏற்கெனவே திருமணமான ஓமலூா் வட்டம், தும்பிப்பாடி கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வரும் வினோத்குமாா் (38) என்பவா் ஆசை வாா்த்தைகளைக் கூறி சுஷ்மிதாவைக் கடத்திச் சென்று 2ஆவது திருமணம் செய்துகொண்டதாக அவரது பெற்றோா்களும், உறவினா்களும் காவல் துறையில் புகாா் அளித்தனா்.
இந்தநிலையில் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு சுஷ்மிதாவின் உறவினா்கள் ஊா்வலமாக வந்து கோட்டாட்சியா் சுகுமாரிடம் சுஷ்மிதாவைக் கண்டுபிடித்து தரும்படியும், கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் மனு அளித்தனா். விசாரித்து ஆதாரங்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியா் உறுதி அளித்தாா். பின்னா் உறவினா்கள் அங்கிருந்து சென்றனா்.