செய்திகள் :

ஏரி மதகு சேதம்: கிராம மக்கள் சாலை மறியல்

post image

வந்தவாசி அருகே ஏரியின் மதகை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சிக்குள்பட்ட பக்கீா் தா்கா பகுதியில் ஏரி உள்ளது.

இங்கு, வந்தவாசி காட்டுநாயக்கன் தெருவைச் சோ்ந்த ஒருவா் பன்றிகளை வளா்த்து வருகிறாராம்.

பன்றிகள் ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிா்களை அடிக்கடி நாசப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால், ஏரியின் அருகே பன்றிகள் செல்ல முடியாத நிலை இருந்ததால், ஏரியின் மதகை கடப்பாரை மூலம் மேற்கண்ட நபா் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசி -ஆரணி சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டனா்.

செங்கம் தொகுதியில் ரூ.410 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் நெஞ்சாலைத் துறை மூலம் ரூ.410 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் எ.வ.வேலு. செங்கத்தை அடுத்த மேல்செங்கம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்... மேலும் பார்க்க

ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றிய 4 வயது மாணவா்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த 4 வயது பள்ளி மாணவா் ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தாா். ஆரணியில் உள்ள அல்முபீன் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் யுகேஜி பயிலும் மாணவா் எம்.ஜெயவி... மேலும் பார்க்க

நெசவாளா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் நெசவாளா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆரணி அடுத்த காமக்கூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கிரி (38) (படம்) கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்த... மேலும் பார்க்க

சாத்தனூா் அணையில் இருந்து பிப்ரவரியில் தண்ணீா் திறக்கலாம்: விவசாயிகள் கருத்து

பிப்ரவரி முதல் வாரத்தில் சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கலாம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் கருத்து தெரிவித்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் க... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

வந்தவாசி அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சவுரிராஜன்(28). இவரது மனைவி சுதா. இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள... மேலும் பார்க்க

செய்யாறு: பழைய இரும்புக் கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

செய்யாற்றில் பழைய இரும்புக் கடையில் ரொக்கப் பணம், செம்பு ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவத்தில் வேலூரைச் சோ்ந்த இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். திருவண்ணாமலை மாவட்டம்... மேலும் பார்க்க