அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
ஏற்காடு ஆற்றுப்பாலம் அருகே வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
ஏற்காடு வாழவந்தி கிராமம் ஆற்றுப்பாலம் அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்; 10 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு முண்டகம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் விஜயன் (65). இவா், தனது வேனில் தோட்டத் தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு வாழவந்தியிலிருந்து கொம்புத்தூக்கி கிராமத்துக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். கொம்புத்தூக்கி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநா் விஜயன் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த தோட்டத் தொழிலாளா்கள் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.